Friday, June 18, 2010

OL Project 3

  • பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
  1. முதலாம் தலைமுறைக்களணிகளுக்கும் நான்காம் தலைமுறைக்கணனிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் 2 தருக.
  2. கணனியின் சுட்டிக்கும் பதிலாகப் பன்படுத்தக்கூடிய பொருத்தமான கருவி எது?
  3. CD க்களின் சேமிப்புத்திறன் என்ன அலகில் குறிக்கப்படும்?
  4. DVD என்தன் விரிவாக்கம் யாது?
  5. CD-R என்பது எவ்வான கருத்தைப் பலப்படுத்ததுகின்றது?
  6. மடிக் கணனிகளில் பொருத்தப்பட்டிருக்கும் காட்சித் திரை எவ்வகைக்குரியது?
  7. ஒரு மெகா பைற்றில் உள்ள பிற்றுக்கள் எத்தனை என்பதைக் கணித்தல்களுடன் காட்டுக.
  8. BF16 என்பதற்குச் சமனான அடி இரண்டு எண் எது?
  9. XOR Gate இன் உண்மைஅட்டவணையை தருக.
  10. தரவு ஒன்றை பிரதியெடுக்க Word இல் பயன்படும் செய்முறையை ஒழுங்ககாக் குறிப்பிடுக.

Wednesday, June 16, 2010

OL Project 2

  • பின்வரும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கதக் பிரயோக மென்பொருட்கள் ஒன்று வீதம் தருக.
  1. கடிதம் ஒன்றை வடிவமைத்தல்.
  2. வீட்டின் மாதக் கணக்கு வழக்குகளை சரிபார்த்தல்.
  3. பாடசாலையின் மாணவர்களின் விபரங்கள் அடங்கிய பெட்டகம் தயாரித்தல்.
  4. சுற்றுலா செல்லவேண்டிய இடங்களை முன்கூட்டியே இணையத்தில் பார்வையிட.
  5. ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு முன்வைப்புக்களைச் செய்தல்.
  • பின்வரும் வினாக்களுக்கு விடை தருக
  1. தரவு என்பது என்ன?
  2. மிகப்பெரிய அளவுடைய தரவுத் தளங்களை கையாள்வதில் உள்ள இடர்பாடுகள் 3 தருக?
  3. தரவுத்தளங்களுக்கு இரு உதாரணம் தருக.
  4. ஆசிரியர்களின் விபரங்களைத் தரவுத் தளத்தில் உருவாக்குவதற்கு தேவைப்படும் விரங்கள் அடங்கிய புலங்கள் 4 தருக.
  5. தரவுத்தளத்தைக கையாள்தில் உள்ள அனுகூலங்கள் 2 தருக.
  • பின்வருவன பற்றி சுருக்கமாக விளக்குக
  1. கற்றலுக்கு கணனியைப் பயன்படுத்துவதில் உள்ள அனுகூலங்கள்
  2. மின்னஞ்சலின் அனுகூலங்கள்.
  3. இணையத்தளத்தின் பிரதிகூலங்கள்.
  4. கணனி வலையமைப்பு.
  5. வங்கித்துறையில் கணனியின் பயன்பாடு.
  • இணையப்பக்கத்தை உருகாகுவது தொடர்பான கேள்விகளுக்கு விடை தருக.
  1. இணையப்பக்கத்தை உருவாக்குவதற்கு தேவைப்படும் மென்பொருட்கள் 3 தருக.
  2. இணையப்பக்கத்தில் உள்ளடக்கவேண்டிய உருப்படிகள் 4 தருக.
  3. இணையப்பக்கத்தை உருவாக்குவதால் ஏற்படும் அனுகூலங்கள் 3 தருக.
  4. இணையப்பக்கத்திற்குரிய Domain Name என்றால் என்ன?
  5. URL என்பதன் விரிவாக்கம் யாது?

OL Project 1

  • பின்வருவனவற்றில் தகவலாக அமையக்கூடியது எது?
    மாணவரின் புள்ளிகள்.
    மாணவர்களின் உயரங்களின் பெறுமதி.
    மாணவர்களின் வயதுகளின் இடை.
    மாணவர்கள் பாடசாலைக்கு வராத நாட்கள்.
  • தலைமுறைக் கணனி வகையில் அடங்காதது
    தனிநபர்க்கணனி
    Supper Computer
    அனலற்றிக்கல் என்ஜின்
    PDA
  • கணனியின் பௌதீகக் கூறுகளை விபரிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய தனிப்பதம் யாது?
    மென்பொருள்.
    வன்பொருள்.
    நிலைப்பொருள்.
    மன்பொருள்.
  • கணனியின் வன்பொருட் பகுதிகளை முகாமிப்புச்செய்வது
    வன்தட்டு
    CPU
    RAM
    UPS
  • பின்வரும் கூற்றுக்களில் பிழையானது?
    விசைப்பலகை ஒரு உள்ளீட்டுச் சாதனம்
    சுட்டி ஒரு வருவிளைவாயகவும் செயற்படக்கூடியது.
    இறுவட்டு ஒரு தேக்கச் சாதனம்
    தெரிவிப்பி ஒரு வருவிளைவுச் சாதனம்.
  • தற்காலக் கணனி வலையமைப்பின் உச்ச வேகம் காட்டப்படுவது?
    Kbps
    Mbps
    GHz
    MHz

OL Project

OL மாணவர்களுக்காக இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்ப்பட்டுள்ளது. விஞ்ஞானம், ICT ஆகிய பாடங்களுக்குரிய வினாக்களின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.